அனுமன் ஜெயந்தி.. ஆஞ்சநேயர் கோயில்களில் காலை முதலே குவிந்த பக்தர்கள்.!

அனுமன் ஜெயந்தி.. ஆஞ்சநேயர் கோயில்களில் காலை முதலே குவிந்த பக்தர்கள்.!

Update: 2021-01-12 10:33 GMT

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு இன்று அதிகாலை 1,00,008 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது.

அதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் பக்தர்கள் காலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை நாளில் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதே போன்று இந்த ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (12ம் தேதி) நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அமைந்துள்ள சுவாமிக்கு வடைமாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், தருமபுரி மாவட்டம், தொப்பூர் வனப்பகுதியில் உள்ள முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் காலை முதலே பக்தர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News