திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. யார் யாருக்கு அனுமதி.. தேவஸ்தானம் அறிவிப்பு.!

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. யார் யாருக்கு அனுமதி.. தேவஸ்தானம் அறிவிப்பு.!

Update: 2020-12-12 09:38 GMT

கொரோனா தொற்று காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனிடையே பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு தளர்த்தியது. அதில் கோயில், உள்ளிட்டவற்றுக்கு தளர்வுகளை தளர்த்தியது.

இதனால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடைமுறைகளை தேவஸ்தானம் அறிவித்து வருகிறது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 25 முதல் ஜனவரி 3ம் தேதி வரை சொர்க்க வாசல் வழியாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் 20,000 பக்தர்களுக்கு இந்த அனுமதி கிடைக்கும்.

மேலும், கொரோனா காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 

Similar News