ராவணனின் பாட்டிற்கு சிவபெருமான் தாண்டவம் ஆடிய அதிசயம் - நிகழ்ந்ததெப்படி?

ராவணனின் பாட்டிற்கு சிவபெருமான் தாண்டவம் ஆடிய அதிசயம் - நிகழ்ந்ததெப்படி?

Update: 2021-01-29 05:45 GMT

சிவபெருமானின் தீவிரத்தை ஒருவர்  உணர வேண்டுமெனில் சிவ தாண்டவத்தை உணரும் பாக்கியத்தை பெற வேண்டும். சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என்ற உண்டு. பெயரே விளக்குவதை போல சிவ தாண்டவம் ஸ்தோத்திரம் அவரின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது. 

ஆனால் இதில் இருக்கும் ஆச்சர்யம் என்னவெனில், இவற்றை இசையமைத்தவர் இலங்கையின் அரசன் ராவணன். ராவணன் குறித்த பல எதிர்மறையான கருத்துகள் இருந்தாலும், அவர் தீவிரமான சிவ பக்தராக இருந்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை.

சிவ தாண்டவ் ஸ்தோத்திரம் என்பது சிவ பெருமானின் எழிலையும், அருள் ரூபத்தையும் அவர் வல்லமையையும் போற்றி துதிப்பதாக உள்ளது. ராவணன் தன் அதீத பலத்தால், உலகையே கைப்பற்றி ஒருவித சோர்வடைந்த வேளையில் சிவனிடம் தனக்கு இந்த பிணைப்பில் இருந்து விடுதலை அளியுங்கள். மோட்சத்தை வழங்குங்கள் என்று கோரினார்.

இந்த மனநிலையை ராவணன் அடைய காரணமாக இருப்பது அவருடைய தீவிரமான பக்தி. அந்த தீவிரமான தவத்தின் பலனாய், சிவபெருமான் பல ஆச்சர்யமூட்டும் வரங்களை ராவணனுக்கு வழங்கியிருந்தார். அந்த வகையில் அவர் ராவணனுக்கு  வழங்கியது சந்திராஹாசம் எனும் வாள். 

இந்த ஆயுதம் இந்து புராணங்களிலேயே மிகவும் சக்தி உள்ள ஆயுதமாக கருதப்படுகிறது. ராவணன் என்பவரின் மற்றொரு முகம் மிக வித்தியாசமானது. பழுத்த ஞானம் உடையவர், பெரும் அறிவு வித்தகராக திகழ்ந்தார்.

பெரும் ஞானியாக திகழ்ந்த ராவணன், மணந்தது மாயாவின் மகளான மண்டோதரியை . அறமும், அழகும் ஒருங்கே இணைந்த பெண்மணி. இவர்களுக்கு பிறந்த மைந்தனின் பெயர் மேகநாதா. 

மேகநாதன், தேவர்களின் அரசரான இந்திரனை எதிர்கொண்டு போரிட்டதால் இந்திரஜித் என்ற பெயரை பெற்றான். ராவணன் பிரம்ம தேவரின் பெயரன் என புராணங்கள் சொல்கின்றன. அதனால் உட்சபட்ச ஞானத்தை அறிவை அவர் பெற்றிருந்தார். 

கணிதம், அறிவியல், ஆயுர்வேதம் என அவர் கற்காத வித்தையும், ஞானமும் இல்லை எனும் அளவிற்கு அவரின் அறிவு உயரத்தில் இருந்தது. ஆனால் இந்த அதீத அறிவினாலும், ஞானத்திலும் அவருக்கு அதீத ஆணவமும், அகந்தையும் இருந்தததே அவரின் அழிவிற்கு காரணமாக அமைந்துவிட்டது.

அந்த அதீத ஆணவத்தின் காரணமாக, சிவபெருமானின் இருப்பிடமான கைலாசத்தையே அசைக்க ராவணன், முற்பட்ட போது அவனை தடுத்து தன் எதிர்ப்பை சிவபெருமான் காட்டிய போது தான் அந்த பிடியில் இருந்து விலகவும், தன் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் ராவணன் பாடியதே தாண்டவ ஸ்தோத்திரம். அந்த ராகத்திற்கு சிவபெருமான் தாண்டவம் ஆடினார் என்பதையே புராணங்கள் எடுத்து இயம்புகின்றன.

Similar News