பாபநாசநாதர் கோயிலில் நகைகள் திருட்டு.. இந்து கோயிலில் மட்டும் திருட்டு நடைபெறுவது எப்படி.?

பாபநாசநாதர் கோயிலில் நகைகள் திருட்டு.. இந்து கோயிலில் மட்டும் திருட்டு நடைபெறுவது எப்படி.?

Update: 2020-12-10 09:45 GMT

திருநெல்வேலி மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க பாபநாசம், பாபநாசநாதர் சுவாமி கோயில் இருந்து திருடுபோன நகைகளை மீட்பதில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது பாபாநாசம். பாபநாசத்தில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான பாபநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு என்று தனிச்சிறப்பு உள்ளது.

இந்த கோயிலில் வேண்டிக்கொண்டால் அனைத்து நிறைவேறும் என்பது ஜதீகம். குழந்தைப்பேறு, திருமணப்பேறு மற்றும் பல்வேறு பாவ நிவர்த்திக்கான பரிகாரங்களை இந்த கோயிலில் செய்யும்பொழுது பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையும் ஆகும். அது போன்ற இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

அது போன்று வரும் பக்தர்கள் காணிக்கையாக, தங்கம், வெள்ளி, பணம் போன்றவற்றை வழங்கிவிட்டு செல்வர். இவை அனைத்தும் கோயில் அறையில் உள்ள பீரோவில் வைத்து பாதுகாக்கப்பட்டு வரும். இந்த காணிக்கை பணம் மற்றும் நகைகளை மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்வது வழக்கமாகும்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோயில் நகைகள் சரிபார்ப்பு, செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றதாக தெரிகிறது. அப்போது உண்டியலில் இருந்த நகை, பணம் சரிபார்த்தபோது பல லட்ச ரூபாய் பணம் மற்றும் நகைகள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் எவ்வளவு, நகை, பணம் மற்றும் யார் இதனை செய்திருப்பார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்து கோயிலில் மட்டும் இது போன்ற நகை, பணம் திருடு போகிறது. இதற்கு யார் காரணம் அறநிலையத்துறையா அல்லது கொள்ளைக்காரர்களா என்பது இந்துக்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.
 

Similar News