மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யான நிகழ்வு.. பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி.!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வருகின்ற 24ம் தேதி மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு நடக்கிறது. இதனை நேரில் காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-13 13:24 GMT

மதுரையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது சித்திரை திருவிழா ஆகும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டும் 2ம் அலை பரவத் தொடங்கியுள்ளதால், தமிழக அரசு கோயில் திருவிழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.




 


இந்நிலையில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வருகின்ற 24ம் தேதி மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு நடக்கிறது. இதனை நேரில் காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அன்றைய நாள் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் திருக்கல்யான நிகழ்வை காணலாம். அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வருகின்ற 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.

Similar News