ரஜினி தி.மலையில் போட்டி.. வெற்றி பெறுவதற்கு அண்ணாமலையார் கோயிலில் யாகம் நடத்திய சகோதரர்.!

ரஜினி தி.மலையில் போட்டி.. வெற்றி பெறுவதற்கு அண்ணாமலையார் கோயிலில் யாகம் நடத்திய சகோதரர்.!

Update: 2020-12-11 06:48 GMT

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் நாளை (12.12.2020) கொண்டாப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டும், புதிதாக கட்சி தொடங்க உள்ளதால் அதில் வெற்றி பெற வேண்டியும் மற்றும் உலக நன்மைக்காகவும் திருவண்ணாமலையில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா மற்றும் அவரது குடும்பத்தார் மிருத்யுஞ்சய யாகம் நடத்தினர்.

பின்னர் சத்திய நாராயணா செய்தியாளர்களிடம் பேசியதாவது: அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தோம். அதனை தொடர்ந்து இந்த கோவிலில் (அருணகிரிநாதர் கோவில்) சிவாச்சாரியார்கள் முன்னிலையில், நாட்டு மக்களும், எல்லா குடும்பங்களும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தப்பட்டது.

வருகிற 31ம் தேதி கட்சியின் பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார். விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு பதில் சொல்லுவார். கட்சி பற்றிய முக்கியத்தகவலை அவர் சொல்லுவார். அவருக்கு எல்லாவிதமான ஆசீர்வாதம் செய்வதுதான் என்னுடைய வேலை.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரஉள்ளதால் கூட யாகம் நடத்தப்பட்டதாக வைத்து கொள்ளலாம். அவரும் நல்லா இருக்கனும், நீங்களும் நல்லா இருக்கனும். ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். 

எல்லா மக்களும் ஒன்றுதான். நல்லது செய்தால் நல்லதே நடக்கும். எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். கடவுள் விரும்பினால் திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் கண்டிப்பாக போட்டியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News