நல்ல குழந்தையை பெற்றெடுக்க கர்பிணி பெண்களுக்கு ஆன்மீகம் காட்டும் வழிமுறைகள்.!

நல்ல குழந்தையை பெற்றெடுக்க கர்பிணி பெண்களுக்கு ஆன்மீகம் காட்டும் வழிமுறைகள்.!

Update: 2020-11-21 06:00 GMT

குழந்தைகளின் வருங்காலத்தை உருவாக்குபவள் தாய் என நான்கு வேதங்களும் சொல்கின்றன. ஒரு குழந்தைக்கு ஆன்மீக ஞானம் கிடைக்கப்பெற தாயின் அணுகுமுறை மிக முக்கிய காரணியாக அமைகிறது. கர்பிணி பெண்களுக்கு சாஸ்திரம் சொல்லும் சில முக்கிய அறிவுரைகளை இங்கே தொகுத்துள்ளோம்.

குறிப்பாக கர்பிணி பெண்கள் மெல்லிய ஆபரணங்கள் அணிய வேண்டும், மிக மென்மையான நிறத்தில் உடையினை தேர்வு செய்து அணிய வேண்டும் என சொல்லப்படுகிறது. மனதை அமைதியாகவும், உணர்வுகளை சமநிலையுடனும் வைத்து கொள்வது மிக அவசியம். ஒரு குழந்தையின் உள்ளத்தையும் உருவத்தையும் வடிவமைப்பதில் தாயின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

கருவில் வளரக்கூடிய ஒரு குழந்தையின் மனநிலையும், உடல்நிலையும் மிக சீராக இருக்க வேண்டுமெனில் தாய் தன் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டியது அவசியம். ஆழமான கிணறு, ஆழமான பள்ளம் போன்ற பயம் மற்றும் பதட்டம் ஏற்படுத்த கூடிய விஷயங்களை பார்க்காமல் தவிர்க்கலாம். காரணம், தாய்க்கு உணர்வு ரீதியில் ஏற்படக்கூடிய மாற்றம் .

குழந்தையை பாதிகும் என்கிறது அறிவியலும், ஆன்மீகமும்.  எனவே நான்கு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு நல்ல அதிர்வுகளை கொடுக்க கூடிய பதிகங்கள், காயத்ரி மந்திரத்தை தினசரி இரு முறை ஓதுவது நல்ல அதிர்வை அக்குழந்தைக்கு கொடுக்கும்.

மேலும், மிகவும் நேர்மறையான எண்ணங்களை கொடுக்க கூடிய புகைப்படங்கள், ஓவியம் போன்றவற்றை வீடுகளில் கண்ணில் தெரியும்படியாக வைத்திருப்பது நல்ல சிந்தனையை கருவுற்ற தாய்மாருக்கு வழங்கும். நாம் உண்ணும் உணவுகளே நம் உடலாகவும், உணர்வாகவும் மாறுகிறது என்ற அறிவியலின் அடிப்படையில்

கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாய் மனரீதியாக உட்கொள்ளும் சிந்தனைகளும், உடல் ரீதியாக உட்கொள்ளும் உணவும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு சார்ந்த விஷயங்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மனம் சார்ந்த நல்ல விஷயங்களை கருவுற்ற தாய்மார்கள் ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்துவதன் முதல் பெற முடியும்.

புராணங்கள், தெய்வீக சிந்தனைகள், அறம் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து வாசிக்கலாம். சிறந்த குருமார்களின் வழிகாட்டுதலின் படி எளிமையான யோக பயிற்சிகள் போன்றவற்றை செய்து வர நல்ல சந்தான பாக்கியம் அமையும் என்பது திண்ணம்.

Similar News