தருமபுரி தீர்த்தமலையில் சிதிலமடைந்து வரும் சுவாமி சிலைகள்.. நடவடிக்கை எடுக்குமாக இந்து அறநிலையத்துறை.!

தருமபுரி தீர்த்தமலையில் சிதிலமடைந்து வரும் சுவாமி சிலைகள்.. நடவடிக்கை எடுக்குமாக இந்து அறநிலையத்துறை.!

Update: 2021-01-17 14:51 GMT

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில். இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஆனால் அங்கு முறையான பராமரிப்பு இல்லை எனறு பக்தர்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை பற்றி அறியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் இந்த புனித தீர்த்தத்தில் நீராட தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தருமபுரியில் இருந்து 60வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது தீர்த்தமலை. இத்திருக்கோயில் அரூர் டூ திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது.

கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது, இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடக்கத்தக்கது.


இந்த அற்புத தளத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். அதே போன்று பவுர்ணமி அன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அப்படி செல்பவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மேலும், கோயிலில் உள்ள சுவாமி சிலைகள் அனைத்தும் சிதிலமடைந்து வருகிறது. இத்திருத்தல் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டாக பக்தர்கள் முன்வைக்கின்றனர்.

எனவே அரசு சிதிலமடைந்து வரும் சுவாமி சிலைகளை உடனடியாக சரிசெய்து பக்தர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 

Similar News