இந்தியாவின் முதல் அதிசயம்.. இவரே அசல் பாகுபலி - அதிசய கோமதேஸ்வரர்.!

இந்தியாவின் முதல் அதிசயம்.. இவரே அசல் பாகுபலி - அதிசய கோமதேஸ்வரர்.!

Update: 2020-11-27 05:30 GMT

ஒற்றை கல்லில் செய்யப்பட்ட சிலைகளில் கோமத்தேஸ்வரா சிலையே உலகில் உயரமான சிலை. ஒற்றை கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட சிலை இது. கர்நாடாகா மாநிலத்தில் சரவணபெலகுலா பகுதியில் விந்தியகிரி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த சிலை. கிட்டதட்ட 57 அடி உயரமான சிலை இது, இது எத்தனை உயரமெனில் , 30 கி.மீ தூரத்திலிருந்தே இந்த சிலையை காண முடியும்.

விந்தியகிரி மலை என்பது சரவணபெலகுலா பகுதியில் இருக்கும் இரண்டு மலைகளில் ஒன்று. மற்றொரு மலையின் பெயர் சந்திரகிரி. இந்த கோமத்தேஸ்வரா சிலை ஜெயின் சமூகத்தின் பாகுபலி என்ற பெயரில் அர்பணிக்கப்பட்டது. இந்த மலையின் உயரத்தை எவ்வளவு உயரத்திலிருந்தும் ரசிக்கலாம். இங்கு நிகழும் மஹாமஸ்தாக்காபிஷேகம் என்பது உலகின் அனைத்து மூலையிலும் இருக்கும் பக்தர்களை ஈர்க்ககூடியது.

இந்த பண்டிகை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்ககூடியது. இந்த பண்டிகையின் போது கோமத்தேஸ்வரர் சிலைக்கு பால், குங்குமபூ, நெய், கரும்பு சாறு போன்றவை அபிஷேகம் செய்யப்படுகிறது. சிலையை புதுப்பிக்கும் பொருட்டு இந்த அபிஷேகம் நிகழ்த்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அடுத்த அபிஷேகம் 2030 இல் செய்யபடும்.

2007 ஆம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கருத்துகணிப்பில் இந்தியாவின் எழு அதிசயங்களுள் முதல் இடம் இந்த சிலைக்கே வழங்கப்பட்டுள்ளது. பாகுபலியின் தீவிர தியானத்தை குறிப்பதாக இந்த சிலை அமைந்துள்ளது. இந்த சிலையின் கண்கள் திறந்த நிலையில் இருக்கின்றன. காரணம், அவரின் புறக்கண்கள் திறந்து இருந்தாலும் அவர் இந்த உலகின் மீதான பற்று அற்றவராக இருக்கிறார் என்பது அதற்கான அர்த்தம்.

அவருடைய சிலைக்கு பின் புற்று ஒன்று உண்டு. அதன் அர்த்தம் தீவிரமான தவம். கோமதேஸ்வரருக்கு இருபுறமும் இருவர் நிற்கின்றனர் அதில் ஒருவர் பெயர் யக்‌ஷ் மற்றும் மற்றொருவர் பெயர் யக்‌ஷினி. இந்த சிலையை சென்றடைய வேண்டுமெனில் 700 படிகட்டுகள் வரை ஏறி செல்ல வேண்டும். இந்த சிலையின் புன்னகை ததும்பும் முகம் இச்சிலையை நோக்கி காண்போரை ஈர்க்க செய்கிறது. இந்த சிலையின் கூடுதலாக இந்த வளாகத்தில் பதினான்கிற்கும் மேற்பட்ட சிறு ஆலயங்கள் உள்ளன.

Similar News