தமிழ் புத்தாண்டு: திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் அணிவிப்பு.!

கோவில் கருவறையில் உள்ள பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர் துர்க்கை அம்பாள் ஆகிய 4 சன்னதிகளிலும் சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.

Update: 2021-04-14 07:17 GMT

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.




 


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், கருவறையில் உள்ள தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு தங்கக் கவசம் அணிவிப்பது வழக்கம். அதே போன்று புத்தாண்டு தினமான இன்று தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.


 



பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தங்க கவச அலங்காரத்தில் இருந்த முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்த பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கோவில் கருவறையில் உள்ள பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர் துர்க்கை அம்பாள் ஆகிய 4 சன்னதிகளிலும் சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.




 


இதனிடையே திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள கோவில் நிலத்தில் 4 ஏர் உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நான்கு கலப்பைகளில் எருதுகள் பூட்டி அழமாக உழுதனர். இதில் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News