காளி ரூபத்தில் மிக உக்கிரமான ரூபம் இவளே! கண்ணகி முக்தி பெற்ற அதிசய தலம்!

காளி ரூபத்தில் மிக உக்கிரமான ரூபம் இவளே! கண்ணகி முக்தி பெற்ற அதிசய தலம்!

Update: 2020-12-22 06:00 GMT

இந்த கோவில் கேரளத்தில் அமைந்திருந்தாலும், தமிழக மக்களும் மிக நெருக்கமாக உணரும் கோவில் கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலின் வரலாறு நம்முடம் மிக நெருங்கியது. விஷ்ணு பரமாத்மா பரசுராமர் வடிவெடுத்த போது, அவரையும் சேர நாட்டு மக்களையும் தாரகன் என்ற அசுரன் மிகவும் துன்புருத்தியிருக்கிறான். இதிலிருந்து விடுபட பரசுராமர் சிவபெருமானை வணங்கிய போது. சிவபெருமான் ஆணையின் படி உதித்தவர் தான் பகவதி அம்மன். பகவதி அம்மன் காளி ரூபம் எடுத்து அந்த அரக்கனை வதைத்திருக்கிறார்.

அரக்கனை வதைக்க பகவதி அம்மன் எடுத்த ரூபம் மிக மிக உக்கிரமானது. உலகெங்கும் இருக்கும் பத்ரகாளி கோவில்களிலேயே மிக உக்கிரமான ரூபம் இது தான் என சொல்லப்படுகிறது. எட்டுகைகளுடன், பெரிய கண்களுடன், ஆக்ரோஷ பார்வையுடன் தலையில் கிரீடம் சூடிய வாரே அதி தீவிரமான ஒரு சொரூபமாக, மிகவும் ஆக்ரோஷமான அரசியை போன்ற வடிவம் பகவதி அம்மன் உடையது. இவருடைய உக்கிரத்தை கண்டு முந்தைய காலத்தில் பக்தர்கள், பகவதி அம்மனுக்கு உயிர்பலியை அர்பணித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இச்சூழலில், இருக்கும் சூழலை சமநிலைப்படுத்த, ஆதிசங்கரர் இங்கே வருகை புரிந்து சிறு சக்ரங்களை நிறுவி, எந்திர பிரதிஷ்டை செய்த இவரை சாந்த சொரூபினியாக்கினார். அதன் பின் உயிர்பலிகள் நிறுத்தப்பட்ட, குங்குமத்தால் ஆன குருதி பூஜை செய்யப்படுகிறது. இளநீரில் மஞ்சள் கலந்து செய்யப்படும் அபிஷேகத்தை ஆதிசங்கரர் துவக்கி வைத்த பின் அந்த முறை இன்றளவும் தொடர்கிறது.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் மிக வலுவான மற்றொரு வரலாறு யாதெனில், பாண்டிய மன்னரால் அநீதியான தீர்ப்பு இழைக்கபட்ட பின், மிகுந்த ஆக்ரோஷத்துடன் மதுரையை எரித்து திரும்பிய கண்ணகி, சேர நாட்டை நோக்கித்தான் வந்தார் என்றும். சேர நாட்டு மன்னர் கண்ணகியின் அருமைகளை உணர்து அவரை தெய்வாக போற்றி வழிபட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இங்குள்ள பகவதி கோவிலில் தவமியற்றிய கண்ணகி இங்கிருக்கும் பகவதி தேவியுடன் இரண்டற கலந்து முக்தியை பெற்றிருக்கிறார் எனவும் நம்பப்படுகிறது.

இந்த கோவிலின் கருவறையிலிருக்கும் அம்மனின் திருவுருவம் பலா மரத்திலானது. கருவறை அருகே ஒரு சிறு அறை மறைக்கப்பட்டிருக்கிறது அதுவும் கருவறைக்கு இணையான சக்தியை கொண்டாதாக வழிபடப்படுகிறது. அருகே சிவபெருமான் இருக்கிறார். இக்கோவிலில் குழந்தைகளுக்கு துலாபாரம் செய்வது மிகச்சிறப்பு. எதிரிகள் தொல்லை, மன நிம்மதி போன்ற சகல துயரங்களும் கொடுங்கலூர் அம்மையே உற்ற துணை. இந்த கோவில் கேரளா மாவட்டத்தில், திருச்சூரிலிருந்து 45 கி.மீ தொலைவிலும், குருவாயூரிலிருந்து 52 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

Similar News