திருவண்ணாமலையில் 28ம் தேதி கிரிவலம் செல்ல தடை: மாவட்ட நிர்வாகம் உத்தரவு.!

கொரோனா தொற்று 2வது அலை பரவத் தொடங்கி விட்டது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.

Update: 2021-03-26 04:14 GMT

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை அடிவாரத்தில் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று 2வது அலை பரவத் தொடங்கி விட்டது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது.


 



இந்நிலையில், வருகின்ற 28ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் ஏராளமானோர்கள் செல்வார்கள். இதனால் தொற்று பரவதை தடுக்கும் விதமாக 28ம் தேதி, பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறையும் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியவில்லை என்ற வருத்தத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News