திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை.!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை.!

Update: 2020-12-05 14:32 GMT

வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோவில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் மற்ற சமயங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.


நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படுகிற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 7 பிரகாரங்கள் 54 உப சன்னதிகள் என 150 ஏக்கருக்கு மேல் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.


இங்கு மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா வருகின்ற 14ம் தேதி திரு நெடுந்தாண்டகம் என்கிற நிகழ்வுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் என்கிற பரமபதவாசல் திறப்பு வரும் டிசம்பர் 25ம் நாள் அதிகாலை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். 


இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிற நிலையிலும், ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக பந்தல், தடுப்புகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் பந்தல் அமைப்பது. தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Similar News