ராமாயணத்தோடு தொடர்புடையது திருச்சி உச்சிபிள்ளையார் கோவில், ஆச்சர்ய வரலாறு.!

ராமாயணத்தோடு தொடர்புடையது திருச்சி உச்சிபிள்ளையார் கோவில், ஆச்சர்ய வரலாறு.!

Update: 2020-12-11 06:00 GMT

பிரமாண்ட மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கிறார் உச்சி பிள்ளையார். 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடம், எழாம் நூற்றாண்டிலிருந்தே திருச்சி மாநகரின் பிரதான அடையாளமாக திகழ்கிறது மலை கோட்டை பிள்ளையார் கோவில். இங்கே இரு தெய்வங்களுக்கு சந்நிதி உண்டு ஒன்று சிவபெருமானுக்கு மற்றொன்று உச்சி பிள்ளையார் எனும் கணபதிக்கு.

இங்கமர்ந்து அவர் மொத்த நகரை கண்களால் கண்டவாறே காத்தருள்கிறார் என்பது நம்பிக்கை. இவருடைய திருமூர்த்தி இங்கே மிகவும் சிறியது, ஆனால் இவரை தரிசிக்க வேண்டுமெனில் ஒருவர்ர் 400 படிகட்டுகளை கடந்து ஏற வேண்டும். இங்கே சென்றடைந்தால், ஒருவரால், மொத்த நகரத்தையும் கண்டு களிக்க முடியும்.

இந்த திருத்தலம் குறித்து சொல்லப்படும் புராண வரலாறு யாதெனில், ராவண வதைக்கு பின், ஶ்ரீராமர் அயோதி திரும்பும் முன் விபீஷணரிடம் ஒரு விஷ்ணு திருவிக்ரகத்தை கொடுத்தாராம். அதை எடுத்து கொண்டு இலங்கை செல்லும் வழியில் திருச்சியை அடைந்த போது, விபீஷணர், விஷ்ணுவின் திருவுருவத்தை கொண்டு செல்வதில் பல தேவர்களுக்கு விருப்பமில்லாது இருந்தது. எனவே விபீஷணரை தடுத்து நிறுத்த, தேவர்கள் அனைவரும் சேர்ந்து கணபதியை அனுப்பியதாகவும், அப்போது விபீஷணரின் முன்பு சிறு சிறுவன் போல பிள்ளையார் தோன்ற, அவரிடம் தான் நீராடி வரும் வரை இந்த விஷ்ணு திருவுருவத்தை காக்க வேண்டும் என விபீஷணர் கேட்டு கொண்டார், முக்கியமாக அதனை கீழே எக்காரணம் கொண்டும் வைக்க வேண்டாம் என சொன்னாராம்.

ஆனால் வீபிஷணர் விஷ்ணு சிலையை இலங்கைக்கு கொண்டு செல்வதை தடுப்பதற்காக, அவர் சொன்ன விதியை மீறி பிள்ளையாரை கீழே வைக்க அவர் அங்கேயே நிரந்தரமாக குடி கொண்டார். இதனால் கோபமுற்ற விபீஷணர் பிள்ளையாரை துரத்த, அவரிடமிருந்த தப்பிக்க அவர் அமர்ந்த இடம் தான் இந்த மலைக்கோட்டை என்பது உள்ளூர் மக்கள் சொல்லும் வரலாறு.

இங்கே மலைக்கோட்டையை அடையும் முன், முக்கியமான ஒரு சிவாலயம் ஒன்று உண்டு. அது தாயுமானவர் கோவில், இங்கே சிவபெருமான் தாய் உருவம் கொண்டு ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது உதவியதால் தாயும் ஆனவர் எனும் பெயர் நிலை கொண்டது. இன்றும் பல கர்பிணி பெண்கள் தாயுமானவரை தரிசிக்க வருகை தருகின்றனர். பல்லவ காலத்து கோவில் எனும் பாரம்பரியம் கொண்ட இடம் திருச்சி, உச்சி பிள்ளையார் கோவில்

நன்றி : ஸ்பீக்கிங் ட்ரீ

Similar News