நவகிரகங்களின் ஆசியை எளிமையக பெறும் வழிகள்.!

நவகிரகங்களின் ஆசியை எளிமையக பெறும் வழிகள்.!

Update: 2020-11-16 07:44 GMT

கோள்களின் அமைப்பில் அந்தந்த கோள்கள் அமைந்திருக்கும் இடமும், மற்ற கோள்களுடன் அவை கொண்டிருக்கும் தொடர்புமே ஒருவருக்கு நன்மையையும் தீமையையும் ஏற்படுத்த காரணமாக அமைகிறது. 

வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றிலிருந்து மீள நவகிரகங்களுக்கு பூஜைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன. இந்து மரபில் கோள்களை ஆட்சி புரியும் நவகிரகங்கள் அதீத முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொருவரின் வாழ்விலும், அவர்களின் விதியை தீர்மானிப்பதில் நவகிரகங்கள் முக்கிய பங்காற்றுவதாக நம்பப்படுகிறது.

அதிலும் ஏழு கிரகங்கள் அந்தந்த கோள்களின் பெயராலேயே வழங்கப்படுகிறது. அதுவே வாரத்தின் ஏழு நாட்களின் பெயராகவும் அமைந்துள்ளது. மற்ற இரண்டு கோள்கள் ராகு மற்றும் கேது என அழைக்கப்படுகின்றன.

கோள்களின் அமைப்பு உச்சம் பெற்று சரியான வகையில் அமையுமாயின் அண்டியும் அரசனாகலாம் போன்ற பழமொழிகள் வழக்கத்திலிருப்பதை நாம் காண முடியும். அதிலும் குறிப்பாக கோள்களின் அமைப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு நமக்கு சங்கடம் நேரலாம். அச்சமயத்தில் பரிகாரமாக அந்த குறிப்பிட்ட கிரகத்தின் அதிபதிக்கு அவருக்கு விருப்பமான உணவினை வழங்குவது வழக்கமாக இருக்கிறது. 

சந்திரனுக்கு சாதம், பால், தயிர், உப்பு, நெய், சர்க்கரை, முந்திரி ஆகிய உணவு பொருட்களை வைத்து வணங்குவது நன்மை தரும். நெருப்பின் அதிபதியாக விளங்கும் சூரியனுக்கு விருப்ப நெய்வேதியமாக வெல்லம், சிவப்பு பருப்புவகைகள், குங்குமபூ, கோதுமை போன்ற உணவு வகைகளை வைத்து வணங்குவதால் நீண்ட ஆயுளும், நீண்ட ஆரோக்கியமும் கிட்டும். 

புதன் கிரகத்தை வணங்க பச்சை பயிரு, பூசணி, மற்றும் பச்சை நிறத்திலான பழங்களை வைத்து வணங்கலாம். செவ்வாய் கிரகம் அனுமரின் கிரகமாக கருதப்படுகிறது. எனவே அவருக்கு விருப்பமான வெல்லம், மாதுளை, மற்ற சிவப்பு நிற பழங்களை வைத்து வழிபடலாம். சுக்கிரனை வணங்க வெள்ளை நிற பழங்கள், சர்க்கரை, சாதம் ஆகியவற்றை படைக்கலாம்.

இவர் நம் நல்வாழ்வின், மகிழ்ச்சியின், வளத்தின் அதிபதியாக இருக்கிறார். வியாழன் கிரகத்தை வணங்க கடலை பருப்பு, மற்றும் மஞ்சள் நிறத்திலான பழங்களை வைத்து வழிபடலாம். இவரை மகிழ்வித்து வணங்குவதால் நோய்கள் குணமாகும். ராகு மற்றும் கேது ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள். 

ஒருவர் நகர்ந்தால் மற்றவரும் பின் தொடர்ந்து நகர்வார் எனவே இவர்களை வணங்க கருப்பு உளுந்து, எள்ளு மற்றும் கருப்பு நிறத்திலான இனிப்பு வகைகள் நெய்வேதியமாக படைக்கப்படுகின்றன. சனி பகவானுக்கு கருப்பு உளுந்து, எள்ளு, கருப்பு நிற மலர்கள் பழங்களை வைத்து வழிபடலாம். சனி பகவானை மகிழ்வித்தால் நம் எதிரிகளின் சூழ்ச்சி வலைகளை எளிதில் வெல்லலாம்.


 

Similar News