காஞ்சி பெருமாளுக்கு உலகளந்த பெருமாள் என பெயர் வர காரணம் என்ன?

காஞ்சி பெருமாளுக்கு உலகளந்த பெருமாள் என பெயர் வர காரணம் என்ன?

Update: 2020-11-08 05:30 GMT

உலகளந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தலத்தை  ஹஸ்திகிரி என்றும் அழைப்பார்கள். ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச ஸ்தலங்களுள் ஒன்று. இந்த கோவிலுக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பு. இந்த கோவிலுக்குள்ளேயே  108 திவ்ய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம், மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய சேசங்களும் உள்ளன.

இங்கு உலகளந்த பெருமாளுடன் அருள் பாலிப்பவர் பெருந்தேவி அம்மையார். உலகளந்த பெருமாள் என்ற பெயருக்கான காரணம் யாதெனில், அந்தண சிறுவனாக அவதரிக்கிறார் விஷ்ணு. அப்போது இருத மாவலி மன்னன், தன்னால் எதையும் வழங்க இயலும் என்ற எண்ணத்துடன் இருப்பதை அறிகிறார்.. யார் எதை கேட்டாலும் தன்னால் கொடுத்து விட முடியும் என நினைக்கிற போது. சில சமயங்களில் அதீத நற்குணங்கள் கூட நமக்கான அகங்காரமாக மாறிவிடும். அதனை போக்க அந்தண சிறுவன் ரூபத்தில் வந்த விஷ்ணு பெருமான் மாவலி மன்னிடம் தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என கேட்கிறார்.

மிகவும் எளிதென எண்ணிய மாவலி மூன்ற அடியை அந்த சிறுவனின் பாதத்தால் அளக்க சொன்னார். அப்போது விஷ்ணு பரமாத்மா தன்னுடைய விஸ்வரூபத்தால் முதல் அடியில் விண்ணையும், இரண்டாம் அடியில் மண்ணையும் அளக்க, தான் மூன்றாவது அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்கிறார். தன் அறியாமை எண்ணி வருந்திய மாவலி மூன்றாவது அடியை தன்னுடைய தலையில் வைக்குமாறு கோறுகிறார். அதன் படி அவர் தலையில் கால் வைக்க, விஷ்ணுவின் வடிவத்தை தான் காண என்ற மாவலியின் வேண்டுகோலுக்கு இணங்க திருமால் வெவ்வேறு நிலையில் காட்சி தந்தார்.. அதுவே ஊரகம், காரகம், நீரகம், மற்றும் திருக்கார்வனம் என வழங்கப்படுகிறது.

பெருமாளையும் பெருந்தேவி அம்மையையும் இந்த இருவரையும் காண நாம் சில படிகட்டுகள் ஏறி செல்ல வேண்டி இருக்கும். இந்த பெமாளுக்கு அத்தி ஊரர் என்ற பெயரும் உண்டு. காரணம் இந்த பெருமாளின் வடிவம் அத்தி மரத்தால் உருவாக்கப்பட்டது. இங்கு பிரகாரத்தின் உள்ளே கூரையில் புனித பள்ளி வடிவிலான உருவம் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் வேயப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. இக்கோவில் 11 நூற்றாண்டில் கட்டப்பட்டது.

Similar News