கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? ஆச்சர்யமூட்டும் அறிவியல் காரணங்கள்.!

கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்? ஆச்சர்யமூட்டும் அறிவியல் காரணங்கள்.!

Update: 2020-12-07 05:45 GMT

இந்தியா என்கிற நாடு அதன் பெருமதிப்பு மிக்க கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. இந்தியா எனும் நாட்டில் பல்லாயிரம் கோவில்கள், பல்வேறு வடிவங்களில், இடங்களில் வேத மரபின் படி உருவாக்கப்பட்டுள்ளன.

கோவிலுக்கு செல்வது என்பது ஒரு மரபு. ஒரு கலாச்சாரம். இந்த தொன்று தொட்ட பழக்கம் இந்தியர்களிடம் அதிகமாக இருப்பதன் காரணம், கோவிலுக்கு செல்வதால் கடவுளின் அருளும் ஆசியும் கிடைக்கிறது. அதனோடு சேர்த்து அமைதியான மனநிலையும், மனத்தெளிவும் ஒருவருக்கு கிடைக்கிறது. கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் ஆச்சர்யம் நன்மைகள் ஏராளம்.

கோவிலினுடைய அமைப்பு முக்கிய காரணம். கோவில் என்பது நல்லதிர்வுகள் நிரம்பியது. காந்த சக்தி  அதிகம் இருக்கும் இடம் கோவில். குறிப்பாக ஒரு மைய இடத்தில் கோவிலின் மூலவர் இருப்பார். மூலவர் இருக்கும் இடத்தை  கர்பகிரஹம் அல்லது மூலஸ்தானம் என்கிறோம். இந்த இடத்தில் உலகின் தீவிரமான காந்த அலைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடவுளின் மீதிருக்கும் மரியாதை, பக்தி, அர்பணிப்பின் காரணமாக நாம் காலணிகளை வெளியே விட்டு செல்கிறோம். இதன் பின்னிருக்கும் அறிவியல் காரணம் யாதெனில், இத்தனை நல்லதிர்வுகள் நிரம்பிய இடத்தில் நம் புறகால்கள் படுகிற போது, அந்த அதிர்வுகள் நம் பாதத்தின் வழியே கடந்து சென்று உடலில் பரவ ஏதுவாக இருக்கும் என்பதால் தான்.

அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் ஐம்புலன்களையும்  உயிர்ப்பிக்கும் வகையில் அமைக்கப்பெற்றது தான் கோவில் மணி. இதனை ஒலிக்கிற போது எழும் ஓசை 7 விநாடிகளுக்கு எதிரொலிக்கும். அந்த எதிரொலி நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களையும், மற்றும் கேட்கும், பார்க்கும், தொடுகை ஆகிய ஐம்புலனில் மூன்று புலன்களையும் தூண்டுவதாக சொல்லப்படுகிறது.

அடுத்து கற்பூர ஏற்றுவதன் பின்னிருக்கும் அறிவியல் காரணம் யாதெனில், இருளிலிருந்து மென்மையாக எழுகிற சிறு ஒளி கண் பார்வைக்கு மிகவும் உகந்தது. எனவே கர்ப குடி எப்போதும் குறைவான வெளிச்சத்துடன் இருக்கும் ஆனால் அங்கே ஏற்றப்படும் கற்பூர ஆரத்தி நம் மனதிற்கு தெய்வ ஒளியை தருவதோடு, கண்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயப்பதாக இருக்கிறது.

மேலும் கற்பூர ஆரத்திக்கு பின்பாக அந்த ஆரத்தியின் சூட்டை ஒற்றி நம் கண்களிலும் உச்சந்தலையிலும் வைப்பதால் நம் தொடு உணர்வு தூண்டப்படுகிறது.

உலகிலேயே நம் மரபில் தான், அறிவியலும் ஆன்மீகமும் இசைந்திருப்பதையும், அதை நம் அறிவார்ந்த ஆன்மீக மூத்தோர் வழக்கப்படுத்தியிருக்கும் ஆச்சர்யத்தையும் காண முடியும்.

Similar News