திருமணமான பெண்கள் ஏன் மெட்டியை அணிய வேண்டும்?
திருமணமான பெண்கள் ஏன் மெட்டியை அணிய வேண்டும்?
இந்திய தேசம் பல வித கலாச்சாரங்களால் ஆனது. இங்கே ஆயிரக்கணக்கான நம்பிக்கைகள், சடங்குகள், விதிகள், பாரம்பரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன.. குறிப்பாக இந்து மரபில் இது போன்ற பல விஷயங்களை நாம் காண முடியும். இதற்கான காரணம், அடிப்படையிலிருக்கும் புராணங்கள், சாஸ்திரங்கள் இவைகளை வலியுறுத்துகின்றன.
இந்து சாஸ்திரத்தில், நாம் உண்ணும் துவங்கி அதிகாலை விழிப்பது முதல் இரவு உறங்குவது வரை அனைத்தும் நம் ஆன்மீக பாதையில் செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்து மரபில் பெண்களுக்கென பிரத்யேக குறிப்புகள் பல இருக்கின்றன.
அதுவும் பெண்கள் அணிகிற ஆடையின் நிறம், ஆபரணங்கள் என அனைத்திற்கும் ஆன்மீக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் திருமணமான பெண்கள் போற்றி அணியும் தாலிக்கு நிகரான மற்றொரு ஆபரணம், மெட்டி.
மெட்டி என்பது மோதிரம் போன்ற வடிவிலானது. இதனை மணமான பெண்கள் கால் பாதத்தின் இரண்டாம் விரலில் அணிவார்கள். தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று தன்னை அடையாளப்படுத்தும் ஆபரணம் மட்டுமல்ல இது. இதற்கு பின் பெரும் அறிவியல் காரணம் மறைந்துள்ளது.
அதாவது, கால் பாதத்தில் இருக்கும் இரண்டாம் விரலில் ஓடக்கூடிய நரம்பு பெண்களின் கருப்பை உடன் தொடர்புடையது. கருப்பையை கடந்து இதயத்தை சென்று அடைகிறது என சொல்லப்படுகிறது. எனவே இந்த இடத்தில் ஒரு மென்மையான அழுத்தத்தை நாம் உருவாக்குகிற போது அது கருப்பையை பலப்படுத்தும் சாத்தியங்கள் அதிகம். எனவே, மெட்டி போன்ற ஒரு ஆபரணத்தை அணியும் வழியை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.
திருமணத்திற்கு பிறகு மெட்டி எனும் அணிகலனை பெண்கள் அணிகிற போது, அது கருப்பையை பலப்படுத்தி அவர்களின் மாதவிடாய் காலங்களை முறையாக வைக்க உதவுகிறட்டு என்பது நம்பிக்கை. மேலும் சீரான இரத்த ஓட்டத்திற்கு இது உதவுகிறது.