இறப்பு சதவீதத்தை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : விஜயபாஸ்கர் தாக்கு..!

Update: 2021-06-03 14:45 GMT

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலை இருந்தாலும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த சமயத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைமுறை  குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்  "புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் டீனிடம் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைமுறை குறித்து கலந்துரையாடினேன். அதன் பின் அங்கு இருக்கும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி, ஆரோக்கியமான உணவு பொருட்கள் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.


இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த பொது "தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்களின் இறப்பு சதவீதத்தை குறைப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறினார்.

அதே போல் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதற்கு அரசு கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News