ஹிந்து கோயில்கள் இடிப்பதை கண்டித்து கோவையில் ஹிந்து முன்னணி போராட்டம்!

Update: 2021-07-17 01:30 GMT

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநகராட்சியினர் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்ணன் குளம் பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார். இந்த கோயிலை இடிக்க கூடாது என்று அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தியும், அதை கண்டு கொள்ளாமல் இந்த கோயிலை இடித்துள்ளனர்.   


இந்த நிலையில் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மாநகராட்சியினர் இந்து கோவில்களை மட்டும் குறிவைத்து இடிப்பதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர். மாநகராட்சியின் இந்த செயலை எதிர்த்து இன்று டவுன்ஹால் பகுதியில் இந்து முன்னணி கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. 


அதே போல், இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு, இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் குவிந்தனர். அப்போது, மசூதிகளை இடிக்காமல் இந்து கோவில்களை மட்டும் மாநகராட்சி குறிவைத்து இடிப்பதாக முறையிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக அரசு ஹிந்து கோயில்களை மட்டும் குறிவைத்து இடிப்பதை கண்டித்து அங்குள்ள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அனுமதி இல்லாமல் போராட்டம் மேற்கொண்ட ஹிந்து முன்னணி கட்சி தொண்டர்களை கைது செய்தனர். 

இந்த சம்பவம் குறித்து ஹிந்து முன்னணி கூறுகையில், "கோவையில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் ஆயிரக்கணக்கான இந்து முன்னணி தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர். ஹிந்து கோவில்களை இடிக்கும் சம்பவங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அராஜகம்." என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News