முதல்வரால் வாழ்க்கை போச்சு, சேலத்தில் வியாபாரிகள் வேதனை!
முதல்வர் வருகைக்காக அகற்றபட்ட கடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை.
சேலம் மாவட்டத்திற்கு கடந்த மாதம் 29 தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அவரது வருகையையோட்டி பாதுகாப்புக்காக வாழைப்பாடி பேருந்து நிலையம் அருகே இருந்த 200 கடைகள் அகற்றபட்டன.
நிகழ்ச்சி முடிந்து சாலையோர வியாபாரிகள் மீண்டும் தங்களின் கடைகளை திறக்க சென்ற போது நெடுஞ்சாலை துறையினர் அவர்களை கடைகளை திறக்க கூடாது என கூறியுள்ளனர்.
இந்நிலையில், பலமுறை அவர்கள் முயன்றும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டம் குறித்து அவர்கள் தெரிவிக்கையில், முதலவர் வருகையையொட்டு கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால், மீண்டும் கடைகளை திறக்க முயன்ற போது அவர்கள் திறக்கவிடவில்லை ஒரு மாதமாக கடைகள் திறக்காததால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முதல்வரின் வருகையால் 200 குடும்பங்கள் வருவாயை இழந்துள்ளது இது தான் விடியல் ஆட்சியா என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.