சிவன் கோயில் நிலத்தில் வீடு: ஆக்கிரமிப்புகளை மீட்க வலியுறுத்தி பா.ஜ.க. மனு!

சிவன் கோயில் நிலத்தில் வீடு கட்டிய நிலங்களை மீண்டும் மீட்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் சசிதயாள் தலைமையிலான நிர்வாகிகள் மனு வழங்கியுள்ளனர்.

Update: 2021-12-07 13:24 GMT

சிவன் கோயில் நிலத்தில் வீடு கட்டிய நிலங்களை மீண்டும் மீட்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் சசிதயாள் தலைமையிலான நிர்வாகிகள் மனு வழங்கியுள்ளனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சீனாபுரத்தில் மிகவும் பழமையான கைலாயநாதர் கோயில் ஒன்று உள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வந்தது.

இதன் பின்னர் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கோயில் பாழடைந்து காணப்பட்டு வருகிறது. மேலும் கோயிலை பராமரிப்பது மட்டுமின்றி நிலங்களையும் பாதுகாத்து வருவதையும் கைவிட்டுள்ளது.

எனவே தற்போதைய நிலையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியுள்ளனர். இது பற்றி தொடர்ந்து மனு அளிக்கப்பட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு கோயில் நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றி, கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Source: Dinamalar


Tags:    

Similar News