நெல்லை: சுவர் விழுந்து இறந்த மாணவர்களின் உடல்களை குச்சியால் தள்ளி பார்த்த ஆசிரியர்கள்!
திருநெல்வேலியில் பள்ளி சுவர் இடித்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் இறந்துள்ள சம்பவத்தில் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாத ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் பள்ளி சுவர் இடித்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் இறந்துள்ள சம்பவத்தில் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாத ஆசிரியர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அலட்சியமாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் தனியார் சாப்டர் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் கடந்த 17ம் தேதி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் காயமுற்றனர். இந்த விபத்தை பார்த்த சக மாணவர்கள்தான் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் மூன்று மாணவர்கள் இறந்துள்ளனர்.
சுவர் விபத்தில் சிக்கிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் குச்சியால் தள்ளி பார்த்ததாக மாணவர்கள் புகார் கூறியுள்ளனர். மாணவர்கள் மீது மனிதாபிமானம் இல்லாமல் செயல்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட், பள்ளி தலைமையாசிரியை பெர்சிஸ் ஞானசெல்வி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தென்னிந்திய திருச்சபை பள்ளிகளின் மேலாளர் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு திருநெல்வேலி சேவியர் காலனியில் தென்னிந்திய திருச்சபை கட்டிய ஒரு சர்ச் கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதில் 15 பேர் காயமடைந்தனர். ஆனால் அந்த சமயத்தில் பிஷப் உள்ளிட்டவர்கள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதே சமயத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு எவ்வித நிவாரணத் தொகையும் பெற்றுத்தரவில்லை.
அதே போன்று தற்போதும் சி.எஸ்.ஐ. நிர்வாகம் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாதது போன்று இருக்கிறது. பிஷப், லே செயலர், நிர்வாகிகள் என்று யாருமே வந்து பார்க்கவில்லை. பாதிப்படைந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கும் ஒரு இரங்கல் கூட இல்லை. ஆனால், மாணவர்களுக்காக இந்து முன்னணி மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் உட்பட பலர் கொதித்தெழுந்துள்ளனர். மாணவர்களின் உயிர்கள் மீது விளையாடும் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Source, Image Courtesy: Dinamalar