தருமபுரியில் காணாமல் போன பெருமாள் கோயில்: அறநிலையத்துறையின் அலட்சியம்!

தருமபுரியில் பெருமாள் கோயில் ஒன்று காணாமல் போயுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-29 01:00 GMT

தருமபுரியில் பெருமாள் கோயில் ஒன்று காணாமல் போயுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரக்காசனஹள்ளியில் கோயில் மற்றும் சிலைகள் காணாமல் போய் விட்டதாக திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணனிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த 27ம் தேதி நேரடியாக கோயில் இருந்த இடத்தை ஆய்வு செய்தார். அப்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெருமாள் கோயில் இல்லாமல் இருந்துள்ளது. அது மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாரியம்மன் கோயில் சிதிலமடைந்து காணப்பட்டுள்ளது என தெரியவந்தது.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், அரக்காசனஹள்ளி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெருமாள் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஏராளமான மானிய நிலங்கள் இருக்கிறது. அதில் பெருமாள் கோயிலுக்கு கட்டடமே இல்லாமல் உள்ளது.

மேலும், மாரியம்மன் கோயில் சிதிலமடைந்துள்ளது. அதுவும் சிறிய கட்டடம் மட்டுமே உள்ளது. ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரைக்கும் கோயிலுக்கு கட்டடம் கட்டவே இல்லை. இந்த கோயிலில் காணாமல் போன சிலை குறித்தும், கோயில் சீரமைக்கின்ற எண்ணமும் இல்லாமல் அதிகாரிகள் உள்ளனர். எனவே கோயிலை பாதுக்காக்கின்ற அதிகாரிகளே இப்படி முறைகேடுக்கு துணை போயுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy:The News Minute

Tags:    

Similar News