கோயில் சொத்துக்களை மீட்பதற்கு அரசு துறைகள் ஒருங்கிணைப்பது அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம்!

கோயில் சொத்துக்களை அடையாளம் காணப்பட்டு அதனை மீட்பதற்கு அரசு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Update: 2021-12-29 03:26 GMT

கோயில் சொத்துக்களை அடையாளம் காணப்பட்டு அதனை மீட்பதற்கு அரசு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. அந்த கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உண்டு. ஆனால் அதில் கிடைக்கும் பணம் சரியான முறையில் சென்று சேருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருக்கிறது.

இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் சொத்துக்களை மீட்ககோரியும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கக் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் அறநிலையத்துறை சார்பில் ஆஜராகினர். அப்போது வருவாய் ஆவணங்களை சரிபார்க்கவும், விசாரணை நடத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் கோயில் சொத்துக்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கோயில் சொத்துக்கள் பற்றிய வருவாய் பதிவேடுகள், ஆவணங்களை, அதிகாரிகளின் உதவியுடன் சரிபார்க்க வேண்டும். அதே சமயத்தில் சொத்துக்களுக்கு உரிமை கோருபதற்காக வைத்திருக்கும் ஆவணங்களையும் ஆராய்வது அவசியம். மேலும், கோயில் பெயர்களில் சொத்துக்கள் இருப்பது தெரியவந்தால், அதனை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமின்றி அறநிலையத்துறை, உள்துறை, வருவாய்த்துறையின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி வழிவகை செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News