இரட்டை பிள்ளையார் கோயிலை இடித்து அட்டூழியம் செய்யும் கிறிஸ்தவர்கள்: வேடிக்கை பார்க்கும் தி.மு.க. அரசு!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இரட்டைப் பிள்ளையார் கோயிலை இடித்தது மட்டமின்றி நிலத்தையும் ஆக்கிரமித்து கிறிஸ்தவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-02 02:24 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இரட்டைப் பிள்ளையார் கோயிலை இடித்தது மட்டமின்றி நிலத்தையும் ஆக்கிரமித்து கிறிஸ்தவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Full View

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகாவிற்குட்பட்ட சாலக்கரை என்ற கிராமத்தில் இரட்டைப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலில் இந்துக்கள் தினமும் வழிப்பாடு நடத்தி வருகின்றனர். சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி இரட்டைப் பிள்ளையார் கோயிலை கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி இடித்துள்ளனர். அது மட்டுமின்றி கோயிலின் இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இந்த சம்பவத்தை தட்டிக்கேட்ட இந்துக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி ஆண்டிமடம் ஒன்றியத் தலைவர் உட்பட 7 பேரை மட்டும் ஒருதலைப்பட்டமாக திமுக அரசு கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய கிறிஸ்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், ஆண்டிமடம், சாலக்கரை கிராமத்திற்கு இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சனில்குமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இந்துக்களிடம் ஆறுதல் கூறியது மட்டுமின்றி, கோயில் இடித்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார். மேலும், கைது செய்யப்பட்ட குடும்பத்தாரை நேரில் சென்று ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான பொருள் உதவியும் செய்தார்.

Source, Image Courtesy: Hindu Munnai 

Tags:    

Similar News