தோப்பில் மாட்டுக்கறியை கொட்டி அட்டூழியம்: காவல்நிலையத்தில் புகார் அளித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்!

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தனது தோப்பில் மாட்டுக்கறியை கொட்டி அட்டூழியம் செய்த அப்துல் ரசாக் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ரவி என்பவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-08 02:14 GMT

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தனது தோப்பில் மாட்டுக்கறியை கொட்டி அட்டூழியம் செய்த அப்துல் ரசாக் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ரவி என்பவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கம்பம் நிர்வாகியாக ரவி செயல்பட்டு வந்துள்ளார். இவர் அப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு வகையில் போராடி பெற்றுக்கொடுத்துள்ளார். இதனிடையே ரவி தோப்பில், அப்துல் ரசாக் என்பவர் மாட்டுக்கறியின் கழிவுகளை கொட்டி அட்டூழியம் செய்துள்ளார். இது பற்றி அப்துல் ரசாக்கிடம் ரவி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

Full View

இதன் பின்னர் கம்பம் காவல் நிலையத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ரவி, அப்துல் ரசாக் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகார் கொடுத்த விவகாரத்தை தெரிந்து கொண்ட அப்துல் ரசாக் கூட்டம், ரவி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் காவல்துறை தடுக்க வேண்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News