உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு தி.மு.க. நிவாரணமே வழங்கல: அரசு மருத்துவர்கள் போராட்டம்!

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போரிட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து ஜனவரி 19ம் தேதி தர்ணாவும், பிப்ரவரி 10ம் தேதி உண்ணாவிரத போராட்டமும் நடைபெறும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியுள்ளார்.

Update: 2022-01-09 06:09 GMT

இது குறித்து அவர் கூறியதாவது: கொரோனா பெருந்தொற்றின் பரவல் சமயத்தில் மருத்துவர்கள் தன்னலமின்றி சேவையாற்றி வருகின்றனர். பல மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அரசு கூறியிருந்தது. தமிழக சுகாதாரத்துறை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

ஆனால் இங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே முதலமைச்சர் உடனடியாக கவனம் செலுத்தி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 19ம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் எனவும், பிப்ரவரி மாதம் 10ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News