"ரேஷன் அரிசி கடத்துவது ஏழைகளுக்கு எதிரான குற்றம்" ஜாமீன் கேட்டவருக்கு மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி பதில்!
ரேஷன் அரிசியை கடத்தி செல்வது ஏழைகளின் பொருளாதாரத்திற்கு எதிரான குற்றம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து கூறியுள்ளது. அரிசி கடத்திய வழக்கில் முன்ஜாமின் கேட்டவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி போலீசார் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிலர் அனுமதியின்றி 300க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றதை கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர். இதனிடையே அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் போலிசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், அரிசி கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ரேஷன் அரிசி கடத்தலில் மிகவும் முக்கிய நபராக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே எதிரியின் வாக்குமூலத்தை படித்தாலே தெரிகிறது. சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை சட்டவிரோதமாக கொள்முதல் செய்து, விற்பனை செய்தது தெரியவருகிறது. மேலும், ரேஷன் அரிசியை ஏழைகள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை கடத்துவது ஏழைகளின் பொருளாதாரத்திற்கு எதிரான குற்றமாக பார்க்கப்படும். எனவே முனஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar