"ஆயுதத்திற்கு அஞ்சி மதம் மாறாதவர்கள் அப்பத்துக்கு ஆசைப்பட்டா மதம் மாறி விடுவோம்?" என்ற வாசகம் ஏந்தி போராட்டம் நடத்திய பெண்கள்!

Update: 2022-01-26 04:02 GMT

தஞ்சை மாணவி தற்கொலைக்கு நீதி வேண்டி, ஈரோட்டில் கோயில் முன்பு பெண்களும் சிறுமிகளும் விளக்கேந்தி போராட்டம் நடத்தினர்.


தஞ்சையில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளியில் பயின்று வந்த இந்து மாணவியை, அப்பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றத்திற்க்கு வற்புறுத்தியதால், அம் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பேசுபபொருளாகியுள்ளது. "உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதன் வரிசையில், ஈரோடு மாவட்டத்தில் பெரிய மாரியம்மன் கோவில் எதிரில், இந்து அன்னையர் முன்னணி சார்பில் பெண்களும், சிறுமிகளும் தஞ்சை சிறுமிக்காக பதாகைகள் ஏந்தியும். விளக்கு ஏந்தியும் போராட்டம் நடத்தினர். 


அவர்கள்  ஏந்திய  போராட்ட பதாகைகளில்  இடம்பெற்ற வாசகங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது 

அதில் கூறியிருப்பதாவது:





" கொண்டுவா கொண்டுவா மதமாற்ற தடைச்சட்டம் கொண்டு வா"

"ஆயுதத்திற்கு அஞ்சி மதம்  மாறாதவர்கள் அப்பத்துக்கு ஆசைப்பட்டா  மதம் மாறி விடுவோம்?"

"இழுத்து மூடு இழுத்து மூடு மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ பள்ளிகளை இழுத்து மூடு"

"நீதி வேண்டும் நீதி வேண்டும் இந்து மாணவிக்கு நீதி வேண்டும்" போன்ற வாசகங்கள் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Tags:    

Similar News