நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு இல்லை என உத்தரவாதம் வேண்டும்: கட்டட ஒப்புதல் வழங்குவதற்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

நீர்நிலைகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்று உத்தரவாதம் பெற்ற பின்னரே நிலத்துக்கான கட்டட ஒப்புதலோ அனுமதியோ வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2022-01-27 10:53 GMT

நீர்நிலைகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்று உத்தரவாதம் பெற்ற பின்னரே நிலத்துக்கான கட்டட ஒப்புதலோ அனுமதியோ வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலனா கட்டடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக இருக்கிறது. இதனால் பல்வேறு நகரங்களில் மழைகாலங்களில் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்ற நிலை உருவாகிறது. இதனை தடுக்கும் விதமாக உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டங்களை இடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் பல இடங்களில் இன்னும் நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் நிலையை நீடித்து வருகிறது. 

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரிய வழக்குகளை நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணை செய்தது. அப்போது ஆக்கிரமிப்புகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படும் என்று தலைமைச் செயலாளர் சார்பில் கூறப்பட்டது. இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பதிவுத்துறையினர், நீர்நிலை நிலங்களைப் பதிவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்பு இல்லை என்ற உத்தரவாதம் பெறாமல் மின் இணைப்புகளோ அல்லது குடிநீர் இணைப்புகளோ வழங்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News