திருப்பூர் : 'திருச்சபை' இயங்கி வருகிறது எனக்கூறி "மதப்பிரச்சாரம்" நடத்துவதாக குற்றச்சாட்டு!
திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளக்கோயில் பகுதியில், "திருச்சபை" எனக் கூறி மதப்பிரச்சாரம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில காலமாக மத பிரச்சாரம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்து மக்களை குறிவைத்து மதப் பிரச்சார பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு முன்னமே இருந்து வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளகோயில் சவுரிபாளையம் என்ற பகுதியில் " பிலிப்ஸ் திருச்சபை " ஒன்று இயங்கி வருகிறது. ஆனால் "திருச்சபை இயங்குகிறது" எனக் கூறி மதம் பிரச்சாரங்களும், துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இத்தகவல் அறிந்த அப்பகுதி இந்து முன்னணி பொறுப்பாளர்கள், திருச்சபை நடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி அப்பகுதி காவல் துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட பதிவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் செளரியங்கினத்து பாளையம் பகுதியில் பிலிப்ஸ் திருச்சபை இருந்து வருகிறோம் எனக்கூறி மத பிரச்சார துண்டுபிரச்சாரம் விநியோகம் . தகவலறிந்த இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார் மனு.