கரூரில் பயங்கரம்: அரசு செவிலியர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை!

Update: 2022-02-20 13:20 GMT
கரூரில் பயங்கரம்: அரசு செவிலியர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசு செவிலியர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வயலூர் என்ற ஊர். அந்த ஊரை சேர்ந்தவர் வளர்மதி, பாப்பக்காப்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் கோடங்கிப்பட்டி ஒத்தக்கடை அருகே விவசாய நிலத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே வளர்மதியின் மகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். செவிலியர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்ற அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Polimer

Image Courtesy: Nakkheeran

Tags:    

Similar News