பக்தரின் தலையில் 'தீ' மூட்டி பொங்கல் வைத்து வழிபாடு!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகாமையில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில் பக்தர் ஒருவரின் தலையில் தீ மூட்டப்பட்டு பொங்கல் வைத்து நூதன முறையில் வழிபாடு நடத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகாமையில் நடைபெற்ற கோயில் திருவிழா ஒன்றில் பக்தர் ஒருவரின் தலையில் தீ மூட்டப்பட்டு பொங்கல் வைத்து நூதன முறையில் வழிபாடு நடத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே சேப்பாக்கம் என்ற கிராமம் உள்ளது. அங்கு அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா நடைபெற்ற நிலையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது அங்கு பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடினர். இதனிடையே வயதான பக்தர் ஒருவரின் தலையில் சும்மாடு வடிவில் துணியைச் சுற்றி அதனை தீ வைத்தனர். அதன் மீது சில்வர் பாத்திரத்தை வைத்து பொங்கல் வைத்து, அம்மனுக்கு வழிப்பட்டனர். இது போன்று வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது அவர்களின் ஐதீகமாகும்.
Source, Image Courtesy: Polimer