தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்துக: இந்து முன்னணி மாநில செயலாளர் வலியுறுத்தல்!
தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நேற்று (மார்ச் 15) இந்து முன்னணி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்து முன்னணி மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் தலைமையேற்று திறந்து வைத்தார். இதில் கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட தலைவர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல் படுத்த வேண்டும் இந்துமுன்னணி மாநிலச் செயலாளர் திரு.வி.எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல்.#இந்துமுன்னணி #மதமாற்றதடைசட்டம் pic.twitter.com/ST7oQDjW6S
— Hindu Munnani (@hindumunnaniorg) March 15, 2022
இதன் பின்னர் மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இந்து பெண்களை சில அமைப்பு காதலித்து ஏமாற்றி அவர்களை மதமாற்றம் செய்து வருகிறது. தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் மதபயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. மேலும் தமிழக அரசு நடுநிலையாக இருப்பதை போல காட்டிக்கொண்டு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அனைவரையும் சரிசமமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Twiter