கோயில் முன்பு மேடை போட்டு ஹிஜாப் போராட்டம்: மசூதி முன்பு இந்துக்கள் போராட போலீஸ் அனுமதிக்குமா?

Update: 2022-03-19 05:10 GMT

சென்னையில் கோயில் முன்பாக மேடை அமைத்து ஹிஜாப் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்ததை போன்று மசூதி முன்பாக போராட்டம் நடத்த போலீசார் அனுமதிப்பார்களா என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதாவது கல்வி நிலையங்களில் அனைவரும் சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்று கூறியது. இதனால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய முடியவில்லை என்று அந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது போன்று போராடுபவர்கள் பொது இடங்களில் அல்லது போராட்டம் நடத்துவதற்கான இடங்களில் போராட்டம் நடத்தினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை, அதற்கு மாற்றாக இந்துக்களின் கோயில் முன்பாக மேடை அமைத்து போராட்டம் நடத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி ட்விட்டரில் கூறியிருப்பதாவது; சென்னை கோயில் முன்பு மேடை போட்டு ஹிஜாப் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்திட்ட காவல்துறை மசூதி முன்பு இந்துக்கள் போராட்டம் நடத்த அனுமதிக்குமா? மசூதி வழியாக சாமி ஊர்வலம் போக அனுமதிப்பார்களா? இந்தச் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அந்த ட்விட்டில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News