காட்சிப்பொருளாக இருக்கும் விக்ரகங்களை கோயிலில் வைத்து வழிபட வேண்டும்: முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்!
காட்சிப்பொருட்களாக இருக்கின்ற விக்ரகங்களை உடனடியாக கோயிலில் வைத்து வழிபட வேண்டும் என்று முன்னாள் சிலை கடத்தல் பிரிவு தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். உலக சிவனடியார்கள் அறக்கட்டளை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியானது திருப்பூர் அடுத்துள்ள அவிநாசி அருகே உள்ள பழங்கரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் உட்பட பலர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநில தலைமை ஆலோசகரும், சிலை கட்டத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு பேசியதாவது; இறைவனிடம் இருந்து விபூதியை வாங்குவது மட்டுமின்றி, மனதார சமய தலைவர்களை மதித்து நடக்க வேண்டும். 60 வயதை தாண்டிய பின்னர் வருகின்ற ஒவ்வொரு நாட்களும் இறைவன் நமக்காக கொடுத்திருக்கிற வரம் ஆகும். அதனை நாம் இறைவனுக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
மேலும், இறைவனின் திருமேனிகளை சிலைகள் என்று கூறக்கூடாது, விக்ரகம் என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமின்றி சென்னை அருங்காட்சியகம், கருவூலம், விக்ரக பாதுகாப்பகம் உள்ளிட்ட இடங்களில் சிறைபட்டிருக்கும் சாமி விக்ரகங்களை கோயிலில் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Source: Dinamalar
Image Courtesy: Twiter