ரமலானுக்கு அரிசி கொடுக்கும் தி.மு.க. ஏன் இந்துக்கள் கூழ் ஊற்ற சலுகைகள் தருவதில்லை?

Update: 2022-03-26 07:07 GMT

ரமலான் நோன்பை முன்னிட்டு திமுக அரசு மசூதிகளுக்கு 6000 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: ஓட்டுக்கு அரிசியா??? மதசார்பற்ற அரசு ஒரு மதத்தினருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். இந்துக்கள் பண்டிகையான பொங்கலுக்கு முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும் பொருள் கொடுக்கப்படுகிறது.

ஆனால் ரம்ஜானுக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் இந்துக்கள் வரிப்பணித்திலிருந்து 6000 மெட்ரிக் டன் அரிசி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம். இந்துக்கள் கூழ் ஊற்ற அரசு சலுகைகள் தருமா? ஓட்டு அரசியல் செய்வதை திமுக மற்றும் திராவிட கட்சிகள் கைவிட வேண்டும். இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News