சேலத்தில் அரசு பள்ளிகளில் சட்டவிரோத மதமாற்றம்: ஆட்சியரிடம் இந்து முன்னணி புகார்!

Update: 2022-03-29 12:59 GMT

அரசு பள்ளிகளில் மத மாற்றம் நடைபெறுதாக கூறப்பட்ட நிலையில், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகளில் சமீப நாட்களாக சட்ட விரோதமாக கிறிஸ்தவ மதமாற்றம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தாரமங்கலம், ஓமலூர், கொங்கணாபுரம், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு முன்பாக மத மாற்றத்தில் ஈடுபட்ட நபர்களை இந்து முன்னணி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதமாற்ற கும்பலினால் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கிறது. அங்கு மதமோல்களை உருவாக்கும் வகையில் செயல்படுவதால் மதமாற்றும் கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை தேவை. அங்கு நடைபெறும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் சேலம் மேற்கு மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட செயலாளர்கள் செல்வராஜ், கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News