ஜெபக்கூடம் கட்ட அனுமதி: பேரூராட்சி அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்பு போராட்டம்!

Update: 2022-04-02 05:38 GMT

நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் புதிதாக ஜெபக்கூடம் கட்டுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியிருப்பதை கண்டிக்கும் வகையில் இந்து முன்னணி நிர்வாகிகள் பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் மார்ச் 31ம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பாகோடு பேரூராட்சிக்குட்பட்ட கோட்டவிளை, நெடிவிளை பகுதிகளில் கிறிஸ்தவ ஜெபக்கூட கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் மோதல்கள் ஏற்படுகின்ற அபாயம் இருப்பதாக கூறி இந்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இது பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதற்கு பாகோடு பேரூராட்சி அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை அறிந்த மேல்புறம் இந்து முன்னணி பொதுச்செயலர் ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனடியாக அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை அறிந்த போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Source, Image Courtesy: Dinamanai

Tags:    

Similar News