மத போதகரை மாற்ற சிறுபான்மையின தலைவரை முற்றுகையிட்ட கிறிஸ்தவர்கள்!

Update: 2022-04-02 05:38 GMT

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏஜி சர்ச் போதகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுபான்மையினர் ஆணைய தலைவரை ஒன்றாக கூடிய கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தேவைகள் பற்றி ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் ஆட்சியர் பங்கேற்றனர்.

அப்போது திருப்பூர் ராமையா காலனி, ஏ.ஜி. சர்ச் போதகர் பரமானந்தம் மீது ஏற்கனவே புகார் இருப்பதால் அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று சர்ச் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த இரண்டு வாரங்களாக சர்ச் பூட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், உடனடியாக மதபோதகர் பரமானந்தத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பதாகைகளை எந்தியபடி சிறுபான்மையின ஆணைய தலைவரை கிறிஸ்தவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பீட்டர் அல்போன்ஸ் என்ன செய்வது என்று விழிபிதுங்கினார். இதனை கேட்டிருந்த அமைச்சர் மற்றும் ஆணைய தலைவர் ஆர்.டி.ஓ. விசாரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் வேறு வழியின்றி கிறிஸ்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Source, Image Courtesy:Dinamalar


Tags:    

Similar News