ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலையின் கட்டுமான பணிகள் நிறைவு: விரைவில் கும்பாபிஷேகம்!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே 145 அடியில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கும் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது.
உலகத்திலேயே மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் நுழைவு வாயில் பகுதியில் முருகர் சிலை 140 அடி உயரம் கொண்டவை ஆகும்.
இந்நிலையில், மலேசியாவில் இருப்பதை விட 5 அடி அதிக உயரம் கொண்ட முருகர் சிலை சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம் பாளையத்தில் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. இதனால் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. முருக பக்தரான ஸ்ரீ என்பவர் தனது நிலத்தில் இந்த சிலையை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Polimer