இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டுள்ள நிலையில் அங்கு உணவுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தை முதல் பெரியவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர் என்று பைபர் படகில் ராமேஷ்வரத்திற்கு வந்த அகதிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் உணவுக்கு கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பல இலங்கை தமிழ் குடும்பங்கள் இந்தியாவுக்கு தப்பித்து வருகின்றனர். அது போன்று பைபர் படகில் வந்த அந்தானி நிஷாந்த் அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் குழந்தைகளுடன் நேற்று (ஏப்ரல் 8) அதிகாலை அரிச்சல்முனைக்கு வந்தனர். அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் கூறும்போது: இலங்கையில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்கள் வாங்குவதற்கு பணம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் ஒரு வேளை உணவு கிடைக்காத சூழல் இலங்கையில் நிலவுகிறது. இதனால்தான் நாங்கள் இந்தியாவுக்கு வந்தோம் என கண்ணீர் வடித்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar