"அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம், வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்!" திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்!

Update: 2022-04-21 13:19 GMT

"தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், ரூபாய் 3 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்" என்று சட்டமன்றத்தில் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.


தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசு " ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் " என்ற திட்டத்தை ரூபாய் 25 கோடியில் செயல்படுத்த உள்ளது.

இதுகுறித்து சட்டமன்றத்தில், 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில் : தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளில்   தங்கம் வெல்வதை  உறுதிசெய்ய, இத்தகைய திட்டங்கள் செயல்படவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. 


மேலும் மதுரை அலங்காநல்லூரில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் மற்றும் வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம் அமைக்கப்பட உள்ளது. மேலும் தமிழக அரசு சிலம்பாட்டக்  கலையை ஊக்குவிப்பதற்காக பல திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.


என்று மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.


தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புகள்,  தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. முதல்வரின் இந்த   அறிவிப்புகள் செயல் வடிவத்திலும் சிறப்பாக இருத்தல்  வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

J Vikatan

Tags:    

Similar News