"மின் தட்டுப்பாட்டை தொடர்ந்து இப்போது தண்ணீர் தட்டுப்பாடு" பொதுமக்கள் வேதனை!

Update: 2022-04-24 13:57 GMT

தென்காசி: 'வீரசிகாமணி' என்னும் கிராமத்தில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருவது அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது .


தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தீவிர மின்வெட்டால் அதை சார்ந்த தொழில்களும் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்வும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.


இதன் வரிசையில், தென்காசி மாவட்டம் வீரசிகாமணி என்னும் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பெரிதளவு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் அக்கிராம மக்களிடம்  தொலைபேசியில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கேட்டறிந்த முதல்வர்  ஸ்டாலின், அதன்பின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


"முதல்வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறைகளை கேட்ட பின்பும், தண்ணீர் தட்டுப்பாடு குறைந்ததாக தெரியவில்லை. முன்பெல்லாம் மூன்று மணி நேரம் தண்ணீர் வந்தது, இப்போது ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. தண்ணீருக்காக இந்த கிராம மக்கள் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாகின்றனர்."  என்று மாரியம்மாள் என்ற பெண்மணி வருத்தத்துடன் பேசினார்.


"மாதக்கணக்கில் தண்ணீர் பிரச்சினையை சந்தித்து வரும் இந்த கிராமவாசிகளின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


News J

Tags:    

Similar News