நடராஜர் படத்துடன் நூல் வெளியிட்ட கிருஸ்துவ அமைப்பு - இந்து முன்னணி முற்றுகை
திருநெல்வேலியில் பேராசிரியர் கட்டளை கைலாசம், பாதிரியார் ஆனந்த் அமலதாஸ் உள்ளிட்டோர் எழுதிய தமிழ் மரபில் கிறிஸ்தவம் என்ற நூல் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று (ஏப்ரல் 28) வெளியிடுவதற்கு இருந்தனர்.
#நெல்லை மாவட்டத்தில் நேற்று #மதமாற்ற நோக்கில்
— Hindu Munnani (@hindumunnaniorg) April 29, 2022
தமிழ் மரபில் கிறிஸ்தவம் என்ற பெயரில் புத்தக வெளியீட்டு விழா.
புத்தகத்தின் அட்டையில் நடராஜர் திரு உருவம் கிறிஸ்தவத்திற்கும் நடராஜருக்கும் என்ன சம்பந்தம் ?#இந்துமுன்னணி முற்றுகை போராட்டம் அறிவித்த பின்பு புத்தக வெளியீடு ரத்து. pic.twitter.com/qxHAkrPxKh
இதற்கிடையே அவர்கள் எழுதிய நூல் அட்டை முகப்பு பக்கத்தில் இந்து கடவுளான நடராஜர் படம் இருந்தது. இதனை கிறிஸ்தவர்கள் வெளியிட்டு அதனை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றது. இது பற்றி தகவல் கிடைத்த இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தது, நூல் முகப்பில் நடராஜர் படம் இருக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றலாநாதன் தலைமையிலான இந்து முன்னணி நிர்வாகிகள் மைய நூலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பயந்துபோன கிறிஸ்தவர்கள் நூல் வெளியீட்டை ரத்து செய்து ஓட்டம் பிடித்தனர்.
Source, Image Courtesy: Twiter