பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது சந்தோஷம்: தி.மு.க. அரசு எப்போது குறைக்கும் - பொதுமக்கள் கருத்து!

Update: 2022-05-22 10:16 GMT

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் விலையை ரூ.200 வரை குறைத்து அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போன்று தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்த பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்போம் என்று தேர்தல் அறிவிப்பில் கூறியது. ஆனால் இதுவரையிலும் எந்த அறிவிப்பையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை. இதனால் மக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைத்தது போன்று தி.மு.க. அரசும் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். அதே போன்ற கருத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Thanthi Tv

Image Courtesy:Zee News

Tags:    

Similar News