ஓசியில் வந்துட்டு சட்டம் பேசுறியா? மாணவிகளிடம் தரக்குறைவாக பேசும் நடத்துநர்!

Update: 2022-05-23 14:15 GMT

அரியலூரில் இலவச பேருந்து அனுமதி சீட்டுடன் அரசுப் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவிகளை கீழே இறங்கும்படி தரக்குறைவாக பேசிய நடத்துநரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பேருந்துகளில் அரசின் இலவச பேருந்தின் அனுமதி சீட்டுடன் கல்லூரி மாணவிகள் பயணிப்பது வழக்கம். அவர்களை அரசு பேருந்து நடத்துநர்கள் சிலர் மரியாதை குறைவாக நடத்துவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

அந்த வகையில் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவி ஒருவரை கீழே இறங்கும்படி வற்புறுத்தப்படும் நடத்துநரின் செயலால் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது பேருந்து புறப்பட உள்ள 5 நிமிடங்களில் மட்டுமே ஏற வேண்டும் என்று நடத்துநர் கூறுகின்றார். இதனால் மாணவிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தி.மு.க. அரசு பெண்களுக்கு நகரப்பேருந்துகளில் இலவசம் என்று சொல்லியதை நம்பி மாணவிகள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். ஆனால் இது போன்ற நடத்துநர்களால் மாணவிகள் பணம் போனால் போகட்டும் என்று சொல்லி தனியார் பேருந்துகளில் பலர் பயணம் செய்யும் நிலைக்கு வந்துவிட்டனர். இது போன்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News