திருமூர்த்திமலை சுற்றுலா மேம்பாட்டு திட்டம் அறிக்கை தயாரிப்புடன் அனைத்தும் முடக்கம்?

Update: 2022-06-13 13:44 GMT

மிகவும் பிரசித்தி பெற்ற திருமூர்த்திமலை சுற்றுலா மையத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான மேம்பாட்டுத்திட்டம், திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் ஆலோசனை கூட்டத்தோடு கிடப்பில் தற்போது போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை. இது சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது. மலையின் மேல் உள்ள பஞ்சலிங்க அருவி மற்றும் அணை, வண்ணமீன் பூங்கா மற்றும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மேலும், திருமூர்த்தி அணை, படகுத்துறை, வண்ணமீன் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்டவையும் உள்ளது. இந்த திருமூர்த்திமலைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆனால் அப்படி திருமூர்த்திமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பதால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்கு மூன்று ஆண்டுக்கு முன்னர் வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கு விரிவான திட்ட அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது. இதற்கு என்று அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பல முறை ஆலோசனை நடத்தினர். அதன்படி அருவியில் குளிக்கும் பெண்களுக்கு உடைமாற்றும் அறை புதுப்பிப்பது சோலார் மின் விளக்கு அமைப்பது என முடிவு செய்தனர்.

அதே போன்று தர்ப்பணம் மற்றும் முடி காணிக்கை செலுத்துபவர்கள் பாலாற்றின் தீர்த்தத்தில் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்காக உடை மாற்றும் அறை, தண்ணீர் தொட்டி அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் உள்ளிட்டவை செய்வதற்கு திட்டம் போட்டனர்.

மேலும், பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் வழித்தடத்தில் அத்துமீறி வனப்பகுதி செல்வதை தடுப்பதற்கு கம்பி வேலை அமைத்தல் நடைபாதை அமைப்பது உள்ளிட்டவைகள் தீர்மானிக்கப்பட்டது. அதே சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி என்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. வெறும் செயல் வடிவமாகவே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை அரசு கண்டுகொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News