உடுமலை: கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி: முதலமைச்சருக்கு புகார்!
உடுமலை அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பியுள்ள நிகழ்வு நடந்துள்ளது.
இது தொடர்பாக கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக அனுப்பியுள்ள மனுவில், உடுமலை கோட்டமங்கலத்தில் மிகவும் பழமை வாய்ந்த வல்லக்கொண்டம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏராளமான நிலங்களும் உள்ளது.
இந்நிலையில், கோயில் அருகாமையில் உள்ள நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்குள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைக்கின்ற முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். எனவே நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் அங்கு தகவலை பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: DNA India